Wednesday, October 23, 2019

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் மோதி கோர விபத்து . ஒருவர் பலி, 40 பேர் வரை காயம்.


தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை
பஸ் மோதி கோர விபத்து
ஒருவர் பலி,40 பேர் வரை காயம்.

மின்னேரியாவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி ஒருவர் பலியாகியுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலையின் பஸ் வண்டி கொழும்பிலிருந்து கல்முனை நோக்கியும் தனியார் பஸ் ஒன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரு பஸ் வண்டிகளும் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் போது நேருக்குநேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலையின் பஸ் சாரதி ஓட்டமாவடி - மீராவோடையைச் சேர்ந்த எச்.எல்.சமீம் என்பவர் மரணமடைந்துள்ளதோடு இரு பஸ்களிலும் பயணித்த நாற்பதுக்கும் மேற்பட்டோர்கள் காயங்களுடன் மின்னேரியா மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








No comments:

Post a Comment