Wednesday, October 23, 2019

கோத்தபாயவுடன் மிகப் பெரும் கொள்ளைக்காரன்! அதிருப்தியில் மக்கள்


கோத்தபாயவுடன் மிகப் பெரும்
கொள்ளைக்காரன்!
                    அதிருப்தியில் மக்கள்   

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மிகப்பெரிய கொள்ளையர் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார்.

நெழுவே சமந்த என்ற நகை கொள்ளையரே பிரச்சார கூட்டத்தில் கோத்தபாயவுக்கு அருகில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கம்பஹா பிரதேசத்தில் உள்ள நகை கடை ஒன்றில் ஒரு கோடி 80 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தவர் என தெரியவந்துள்ளது.

பெரிய கொள்ளையரான நெழுவே, கோத்தபாயவுக்கு அருகில் செயற்படும் புகைப்படும் ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கோத்தபாயவுடன் அவர் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் ஜனாதியாக வர போட்டியிடும் கோத்தாபய கொள்ளையர்களுடன் நெருக்கமாக உள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது





No comments:

Post a Comment