Wednesday, October 30, 2019

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க ஐதேகவில் இருந்து நீக்கம்



இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க
ஐதேகவில் இருந்து நீக்கம்



வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
                                                                                                                                       
அவர் விரைவில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என்றும், அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று வசந்த சேனநாயக்க அண்மையில் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையிலேயே வசந்த சேனநாயக்கவை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து, ஹிந்த ராஜபக்சவின் 52 நாள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்ட வசந்த சேனநாயக்க  பின்னர், ஐதேகவுக்குத் திரும்பியிருந்தார்.

இந்தமுறை அவர் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்வுக்கு ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment