Monday, October 28, 2019

ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித் உடல் மீட்பு



ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித் உடல் மீட்பு

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல், 88 அடி ஆழத்தில் மீட்கப்பட்டது.
                                                                           
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்து 5 நாட்கள் ஆன நிலையில், இன்று (அக்.,29) அதிகாலை 2.30 மணிக்கு, சுஜித் உயிரிழந்ததாக, வருவாய்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனையடுத்து சுஜித்தின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இடுக்கி போன்ற கருவி தயார் செய்யப்பட்டது. பேரிடர் மீட்புக்குழுவினர் 88 அடி ஆழத்தில் குழந்தை சுஜித்தின் உடலை மீட்டனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தை சுஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. சிறப்பு கருவிகள் மூலம் அவனது உடல் வெளியே எடுக்கப்பட்டது. சுஜித் எப்போது உயிரிழந்தான் என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும். இங்கிருக்கும் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் சிமெண்ட் கான்கிரீட் கொண்டு மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






No comments:

Post a Comment