Thursday, December 26, 2019

கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது



கஜகஸ்தானில் 100 பேருடன்
 சென்ற விமானம்
 விபத்தில் சிக்கியது
  
கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி நகரில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
கஜகஸ்தான் நாட்டின் அலமட்டி நகரில் இருந்து, நூர்சுல்தான் நகருக்கு பெக் ஏர் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது. அதில் 95 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 100 பேர் பயணித்தனர். இந்த விமானம் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களில் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீடுகள் இடிந்து விழுந்தன. விமானத்தின் ஒரு பகுதி நொறுங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 14 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமான நிலையத்தில் இருந்து விமானம் டேக்ஆப் ஆனபோது போதிய உயரத்திற்கு எழும்பாததால், கான்கிரீட் வேலியில் மோதி பின்னர் அதனை ஒட்டியுள்ள 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக அரசு தெரிவித்துள்ளது.







No comments:

Post a Comment