Monday, December 23, 2019

300 மில்லியன் ரூபாவிற்கும் குறைந்த கடன் தொகை ஏலமிடப்படும் சொத்துக்கள் ஒரு வருட காலத்திற்கு இடை நிறுத்தப்படும்


300 மில்லியன் ரூபாவிற்கும் குறைந்த கடன் தொகை
ஏலமிடப்படும் சொத்துக்கள்
ஒரு வருட காலத்திற்கு இடை நிறுத்தப்படும்



300 மில்லியன் ரூபாவிற்கும் குறைந்த கடன் தொகையை திரப்பி செலுத்த முடியாமல் போனதினால் ஏலமிடப்படவுள்ள செத்துக்கள் ஏவலம் இடப்படுவதை ஒரு வருட காலத்திற்கு இடை நிறத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தண விக்கமளித்துள்ளார். கடந்த அரசாங்க காலத்தில் ஒப்பந்தங்களுக்காக நிதி செலுத்தப்படாமையினால் பெரும் சிரமங்களுக்கு உள்ளானவர்கள் இருக்கின்றனர்.

இதனை கவனத்தில் கொள்வதைப் போன்று வங்கி முறையையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறையினர் பெற்ற 300 மில்லினுக்கும் குறைந்த கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்காக அவர்களுக்கு சலுகையளிக்கும் வகையில் இந்த முறையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

ஆனால் இதன் ஊடாக இந்த கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்றும் அமைச்சர் கூறினார். இது ஒரு தற்காலிக தீர்வாகும். இந்த கடனை திருப்பி செலுத்தக்கூடிய விரிவுபட்ட கட்டமைப்பிற்கான நடைமுறை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வங்கிகளின் அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இவர்கள் பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்தக்கூடிய கட்டமைப்பிற்கான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் அதிகாரிகளிடம் கூறியதாகவும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment