Friday, December 13, 2019

நாளை கொழும்புக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தம்


நாளை கொழும்புக்கான
நீர் விநியோகம் இடைநிறுத்தம்



கொழும்பில் பல பிரதேசங்களில் நாளை இரவு தொடக்கம் 24 மணித்தியால காலப்பகுதியில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை இரவு 8 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரையில் கொழும்பு 01, 02, 03, 04, 07 , 08, 09 ,10 11 ,12 ,13 ,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தை கொண்டதாக இருக்கும் என்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலையில் இருந்து மாளிகாவத்தைக்கான நீர் விநியோக பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள தடையை சரி செய்யும் வகையில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளமையால் இந்த நீர் விநியோகத்தடை இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment