Monday, December 23, 2019

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபுள்யூ.டீ லக்ஷ்மன் நியமனம்



மத்திய வங்கியின் புதிய ஆளுநராக

பேராசிரியர் டபுள்யூ.டீ லக்ஷ்மன் நியமனம்




இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபுள்யூ.டீ லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக இன்று (24) தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.

1994 முதல் 1999 வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைகழகத்தில் துணை வேந்தராக இருந்த அவர் இலங்கையில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணராவார்.

கல்வித்துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக 2005 ஆம் ஆண்டு அவருக்கு தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டிருந்தது.


No comments:

Post a Comment