Sunday, December 15, 2019

அரசாங்கத்தின் புதிய கொள்கை பிரகடனம் இணையத்தில்...


அரசாங்கத்தின் புதிய கொள்கை பிரகடனம்
இணையத்தில்...



அரசாங்கத்தின் புதிய கொள்கை  பிரகடனம் இணையத்தில்...அரசாங்கத்தின் புதிய கொள்கைபிரகடனம் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பயனுள்ள பிரஜை, மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், ஒழுக்கவிழுமியங்களைக் கொண்ட சமூகம் மற்றும் செழிப்பான தேசத்தை கட்டியெழுப்புவதே இந்த கொள்கை பிரகடனத்தின்முக்கிய நோக்கமாகும். 2020 – 2025 காலப்பகுதியில் விசேடபொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச்செய்து, உள்ளுர் உற்பத்தியை ஆறு தசம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மட்டத்தில்பேணுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேவேளை தனிநபர் வருமானம் ஆறாயிரத்து 500 டொலர்வரை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை வேலையில்லாப் பிரச்சினையைநான்கு வீதத்திற:கும் குறைவான மட்டத்தில் பேணுவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.மேலும், வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை உள்ளுர் உற்பத்தியின் நான்கு வீதத்திற்கும்குறைவாக பேணுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை எட்டுவதற்கு அரசாங்கத்தின் செலவினம்மற்றும் வருமானத்தை சிறந்த முறையில் முகாமை செய்வதும் கொள்கை பிரகடனத்தின் முக்கியநோக்கங்களில் ஒன்றாகும். ரூபாவின் பெறுமதியை உறுதியான மட்டத்தில் பேணுவதும் இதன் ஒருநோக்கமாகும்.  அரசாங்கத்தின் இந்த புதிய கொள்கைபிரகடனத்தை பின்வரும் இணைய தள முகவரில் பார்வையிட முடியும்.

No comments:

Post a Comment