Wednesday, December 25, 2019

இன்று இடம்பெற்ற சூரிய கிரகணம் முல்லைத்தீவில் தெளிவாக பார்க்க முடிந்துள்ளது



இன்று இடம்பெற்ற
சூரிய கிரகணம் முல்லைத்தீவில்
தெளிவாக பார்க்க முடிந்துள்ளது



இன்று (26) காலை இடம்பெற்ற சூரிய கிரகணத்தை முல்லைத்தீவில் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்ததாக இலங்கை கோளரங்கத்தின் (Sri lanka Planetarium) பணிப்பாளர் திருமதி அருணா பிரபா பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனை அவதானிப்பதற்காக முல்லைத்தீவில் தமது பிரிவு முகாமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை இன்று தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்ததுடன் சீரான காலநிலையும் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை இந்த பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.




No comments:

Post a Comment