Sunday, January 5, 2020

ரயில் பயணிகளுக்கான 500 ரூபா விலையிலான நிவாரண பொதி



ரயில் பயணிகளுக்கான
500 ரூபா விலையிலான 
நிவாரண பொதி



அடுத்த வாரம் முதல் ஊழியர்கள் பெருமளவில் பயணிக்கும் ரெயில் நிலையங்களில் இந்த நிவாரண விலையிலான பொருட்கள் அடங்கிய பொதியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யில் பயணிகளுக்கு 500 ரூபா நிவாரண விலையிலான பொருட்கள் பொதியொன்றை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்ட மொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச தலைமை நிறைவேற்று அதிகாரி துஷ்மந்த தொடவத்த தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் இது மருதானை ரெயில் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதில் சிவப்பு அரிசி, பருப்பு, சீனி, ரின்மீன் என்பன அடங்கியுள்ளன.பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய இந்த பொருட்கள் பொதியை மாற்றிக் கொள்வதற்கு லக்-சதொச நிறுவனம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019 டிசம்பர் மாதத்தில் சதொசவுக்கு 37.8 வீத அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கமைவாக 240 கோடியாக இருந்த விற்பனை புரள்வு டிசம்பர் மாத இறுதியில் 340 கோடியாக அதிகரித்துள்ளது.

நட்டத்தில் இயங்கும் சதொச விற்பனை கிளைகளை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் லங்கா சதொச தலைமை நிறைவேற்று அதிகாரி துஷ்மந்த தொடவத்த தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment