Saturday, January 4, 2020

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க
 கைது செய்யப்பட்டுள்ளார்



ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு நேற்று (04) பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திர ஆணையின் அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி மற்றும் அதற்குப்பயன்படுத்தப்படும் 9MM ரக 127 தோட்டாக்கள் மற்றும் சந்தேகத்திற்குறிய சில ஆவணங்கள்  கண்டுபிடிக்கட்டுள்ளன.






No comments:

Post a Comment