Tuesday, January 7, 2020

அஸி திஸி ஊடக புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன


அஸி திஸி ஊடக புலமைப் பரிசிலுக்கான
 விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன



ஊடகவியலாளர்களுக்கான அஸி திஸி புலமைப் பரிசில் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இத் துறையில் 3 வருட கால சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் அல்லது அச்சு ஊடக நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், இணைய ஊடகவியலாளர்கள் போன்றோர் விண்ணப்பிக்க முடியும்.

புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பிக்கும் கற்கை நெறியானது ஊடகத்துறையுடன் நேரடியாக தொடர்புபட்டதாக இருக்க வேண்டும். அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கும் ஊடக அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமானது.  விண்ணப்பிக்கும் வயதெல்லை 18 முதல் 55 ஆகும்.

ஒரு ஊடகவியலாளர் இரண்டு முறை புலமைப் பரிசில் பெறமுடியும் முதற் தடவை தகைமை பெற்று கற்கை நெறியை பூர்த்தி செய்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் இரண்டாவது தடவைக்காக விண்ணப்பிக்க முடியும்.

இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு கற்கை நெறிக்காக அல்லது பட்டப் பின் படிப்பு கற்கை நெறிக்காக இரண்டு இலட்சம் ரூபா வரம்பிற்கு உட்பட்டவாறு பெறலாம். நீண்டகால - குறுகியகால சான்றிதழ் கற்கை நெறிகளுக்காக 100,000 ரூபா உச்ச வரம்புக்குட்பட்டவாறும் புலமைப் பரிசில் பெறலாம்.

விண்ணப்ப படிவங்களை அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு தகவல் திணைக்களத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


No comments:

Post a Comment