Friday, May 22, 2020

'அமெரிக்காவில் 50% உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்': கொலம்பியா பல்கலைக்கழகம்


'அமெரிக்காவில் 50% உயிர்களைக்

 காப்பாற்றி இருக்கலாம்':
 கொலம்பியா பல்கலைக்கழகம்


கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் இதுவரை, 15.8 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3ம் திகதி வரையிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதில், தெரிவித்துள்ளதாவது:

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலைப் பெருந்தொற்றாக அறிவித்தபின்னும், மிகத் தாமதமாக மார்ச் 16ம் திகதி, பயணங்களைக் கட்டுப்படுத்துமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால், மார்ச் 19ல் தொடங்கி ஏப்ரல் 3 வரை, வெவ்வேறு திகதிகளில் ஒவ்வொரு அமெரிக்க மாகாணங்களும் ஊரடங்கை அறிவித்தன.

ஒரு வார காலத்துக்கு முன்னதாக ஊரடங்கை அறிவித்திருந்தால், 36 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதைத் தடுத்திருக்க முடியும். இதுவே இரண்டு வார காலத்துக்கு முன் ஊரடங்கை முலாக்கியிருந்தால், 50 சதவீத மரணங்களைத் தடுத்திருக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கருத்தை மருத்துவத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்களும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment