Tuesday, May 26, 2020

அமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது


அமெரிக்காவில் கொரோனா பலி:
ஒரு லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 30 பேர் பலியாகி உள்ளனர்.அமெரிக்காவில் இது வரை 17 லட்சத்து 300 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 லட்சத்து 37 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து ,301 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து,977 ஆக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 28 லட்சத்து 83 ஆயிரத்து,266 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



No comments:

Post a Comment