Saturday, July 4, 2020

ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா - அதிரும் உலக நாடுகள்


ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு
 புதிதாக கொரோனா
- அதிரும் உலக நாடுகள்
  


உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்து 04 ஆயிரத்து 873 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்து 04 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 12 லட்சத்து 04ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 270 பேருக்கு புதிதாக
கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 லட்சத்து 61 ஆயிரத்து 417 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 832 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 62 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 28,90,588
பிரேசில் - 15,43,341
ரஷியா - 6,67,883
இந்தியா - 6,25,544 
ஸ்பெயின் - 2,97,625
பெரு - 2,95,599
சிலி - 2,88,089
இங்கிலாந்து - 2,84,276
இத்தாலி - 2,41,184
மெக்சிகோ - 2,38,511
ஈரான் - 2,35,429
பாகிஸ்தான் - 2,21,896
துருக்கி - 2,03,456
சவுதி அரேபியா - 2,01,801

No comments:

Post a Comment