இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை
.நா. மனித உரிமை ஆணையர் கருத்துக்கு
இலங்கை அரசு கண்டனம்

ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை விவகாரத்தில் நவநீதம் பிள்ளை கருத்துக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து .நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை குழு இலங்கைக்குள் நுழைய இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து ஊடங்களுக்கு பேட்டியளித்த .நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு செல்லாமலேயே விரிவான விசாரணையை நடத்த முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறபட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் .நா. மனித உரிமை ஆணையத்திடம் உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணை எப்படி நடைபெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதை போல நவநிதம் பிள்ளை பேட்டி உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் அந்த விசாரணை ஒரு தலைபட்சமாக இருக்கும் என்று இலங்கை கூறியுள்ளது.

.நா. மனித உரிமை ஆணையராக புதிதாக பொறுப்பேற்க இருக்கும் சையதுஅல்ஹுசேன் பாரபட்சமின்றி செயல்படுவார் என்று நம்பிக்கை உள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.புதிய ஆணையாளர் பக்கச் சார்பின்மை, தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமை, சமமாக நடத்துதல் போன்ற கொள்கைளை பின்பற்றி செயற்படுவார் எனவும் நாடுகளின் இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, தனது ஆணையை முன்னெடுப்பதில் அரசுகளுக்குள்ளான உள்ளூர் நியாதிக்கம் என்பவற்றை மதிப்பார் எனவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 .நா. ஆணையராக உள்ள நவநிதம் பிள்ளை இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top