இன்று உலக இடதுகை பழக்கமுடையோர் தினம்
இன்று
"உலக இடதுகை
பழக்க முடையோர்
தினம்" கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும்
ஆகஸ்ட் 13 ஆம்
நாள் உலக
இடதுகை பழக்கமுடையோர்
தினமாக கொண்டாடபட்டு
வருகிறது. முதன்
முதலாக
1976 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
உலக மக்கள்தொகையில்
7 முதல் 10 சதவீதத்தினர் இடது கை
பழக்கமுள்ளவர்களாக இருப்பதாக ஒரு
கருத்து கணிப்பு
கூறுகிறது. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் வீகிதாச்சாரப்படி குறைந்திருப்பதனால்
சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள்
எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இந்த இடதுகைப்
பழக்கம் பிறப்பிலே
சிலருக்கு ஏற்படுகின்றது.
மனிதனின்
மூளையானது மூன்று
பகுதிகளைக் கொண்டது. இதில் பெருமூளை
என்பது
இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க
அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க
அரைக்கோளம் உடலின் இடதுப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன.
இதில் பெரும்பாலானோருக்கு
இடதுப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும்.
இதனால் அவர்களுக்கு
வலதுப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால்
ஒரு சிலருக்கு
மாறாக வலதுப்பக்க
அரைக்கோளம் மேலோங்கி செயல்படும் அப்படி இருக்கும்
நபர்களுக்கு இடது கை பழக்கம் ஏற்படுகிறது
இடது
கைப் பழக்கமுள்ள
குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே
வலது கைக்கு
மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை
இவர்கள் மாற்ற
முயற்சி செய்தால்
பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது
ஒரு ஆய்வு.
0 comments:
Post a Comment