சானுக்க ரத்வத்தே உட்பட 5 பேர் விளக்கமறியலில்
அரசாங்க
நிதியை மோசடி
செய்தார் என்ற
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஷானுக ரத்வத்த,
தர்மப்பிரிய பண்டார தசநாயக்க, ரொமேஷா துஷாந்தி
செனரத், சஞ்ஜீவ
தயாரத்ன மற்றும்
நிலோஷான் ரொமேலோ
மெண்டிஸ் ஆகியோரை,
எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் லங்கா
ஜயரத்ன, உத்தரவிட்டார்.
சானுக்க
ரத்வத்தே, நாடாளுமன்ற
உறுப்பினர் லொஹான் ரத்வத்தேவின் சகோதரராவார். சானுக்க
ரத்வத்தே, முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் அரச நிதியை தவறாக
கையாண்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
லொஹான்
ரத்வத்தே முன்னாள்
ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கி வரும் கூட்டு
எதிர்க்கட்சியின் அங்கம் வகிப்பதுடன், மகிந்தவுக்கு மிகவும்
நெருக்கமானவராகவும் இருந்து வருகிறார்.
லொஹான்
ரத்வத்தேவின் தந்தையான அனுருத்த ரத்வத்தே, முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா
பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தாயரான முன்னாள் பிரதமர்
சிறிமாவோ பண்டாரநாயக்கவின்
சகோதரர் என்பது
குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment