பாகிஸ்தானில் ரயில்கள் மோதி விபத்து
6 பேர் பலி150 பேர் படுகாயம்
பாகிஸ்தானின்
முல்தான் பகுதியில்
பயணிகள் ரயில்
மற்றும் சரக்கு
ரயில்கள் நேருக்கு
நேர் மோதி
விபத்திற்குள்ளாகின. இதில் 6 பேர்
பலியாகி உள்ளனர்.
150 பேர் படுகாயம்
அடைந்துள்ளனர்.
விபத்து
நடந்த பகுதியில்
தொடர்ந்து மீட்புப்
பணிகள் நடந்து
வருகிறது. கராச்சியில்
இருந்து புறப்பட்ட
அவாம் பயணிகள்
எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளாகி உள்ளது. விபத்திற்கான காரணம்
குறித்து விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன..
0 comments:
Post a Comment