கல்வியமைச்சுக்குள் அத்துமீறிய வைத்தியர்கள்
வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு
தமது பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ள கூறி வைத்தியர்கள் சிலர் நேற்று மாலை முதல் கலவியமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர்.
இவ்வாறு கலவியமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள வைத்தியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய, அதன் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா உள்ளிட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு கல்வியமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் கல்வியமைச்சினால் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து பார்த்த கடுவலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததுள்ளது.
இவர்களின் போராட்டம் தொடர்பாக கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இலங்கையில் 352 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன.
இடமாற்றம் பெற்றுச் செல்லும் பெரும் எண்ணிக்கையிலான வைத்தியர்கள் கொழும்பு றோயல், ஆனந்தா, நாலந்தா, விசாகா, கண்டி தர்மராஜ, கிங்ஸ்வுட், மஹாமயா, ஹை ஸ்கூல், குருணாகல் மலியதேவ ஆண்கள், பெண்கள் பாடசாலை உள்ளிட்ட நகரங்களின் முக்கிய 12 தேசிய பாடசாலைகளில் மட்டுமே தமது பிள்ளைகளை சேர்க்க வைத்தியர்கள் விரும்புகின்றார்கள்.
தற்போது காணப்படும் சுற்று நிருபத்தின் அடிப்படையில் 43 பாடசாலைகளில் தரம் ஒன்றுக்காக 62 மாணவ மாணவியரையும் ஏனைய வகுப்புகளுக்காக 27 மாணவ, மாணவியரையும் சேர்க்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பங்களை நிராகரிக்கும் வைத்தியர்கள் 12 பாடசாலைகளில் மட்டுமே தமது பிள்ளைகளை சேர்க்க வேண்டுமென கோரி வருகின்றனர்.
பிரபல பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்காக சிலர் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றனர்.
உதாரணமாக கம்பஹாவிலிருந்து பெம்முள்ளவிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர்கள் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் பிள்ளையை அனுமதிக்க வேண்டுமென கோருகின்றனர்.
வைத்தியர்களின் இந்தக் கோரிக்கை நியாயமற்றது, இதனால் சாதாரண பொதுமக்களுக்கு அநீதி ஏற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment