ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 

கட்டார் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு


கட்டார் நாட்டிற்கான இரண்டுநாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கட்டார் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் செய்க் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல்தானி Sheikh Mohamed Bin Abdul Rahaman Al Thani  இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
டோஹா நகரில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறையில் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் கட்டார் முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இலங்கையிலுள்ள புதிய முதலீட்டு மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார்.

இரண்டு நாடுகளுக்கிடையில் இருந்து வரும் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் புதிய உறவுகளை ஏற்படுத்தவும் ஜனாதிபதியின் இந்த விஜயம் உதவும் என்று கட்டார் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

வெற்றிகரமான சந்தர்ப்பங்களில் மட்டுமன்றி பல்வேறு கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் இலங்கை கட்டார் நாட்டுடன் தொடர்ச்சியாக இணைந்திருந்தமை குறித்து கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுகின்ற இலங்கை உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டினார்.

பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் தற்போது கட்டார் நாட்டில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவதுடன் எதிர்காலத்தில் இலங்கை தொழில் வல்லுனர்களுக்கு கட்டார் நாட்டில் அதிக சந்தர்ப்பங்களைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை குறித்து கட்டார் வெளிவிவகார அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top