நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து
ரூபா 2 1/2 கோடி பெறுமதியான ஹெரோயின்மீட்பு
கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது

நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றிலிருந்து 2.0796 kg ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின், வெள்ளவத்தை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (17) இரவு 8.45 மணி அளவில் கொட்டாஞ்சேனை, பரடைஸ் மைதானத்திற்கு அருகில் வைத்து குறித்த காரை சோதனையிட்டபோது இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, போதைப்பொருளுடன் குறித்த காரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி ரூபா 2 1/2 கோடிக்கும் அதிகமென கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 33 வயதான கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top