சகல அரசியல் கட்சி தலைவர்களுக்கும்
ஜனாதிபதி பாராட்டு
தம்மால்
வழங்கப்பட்ட வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதற்கு பாராளுமன்றத்தினை
பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் இணக்கம்
தெரிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
தமது பாராட்டுக்களைத்
தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில்
ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை முடிவுக்கு கொண்டுவரும்
நோக்கில் நேற்றைய
தினம் இடம்பெற்ற
சர்வ கட்சி
சந்திப்பின்போது தம்மால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை முறையாக
பின்பற்றுவதற்கு பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம்
செய்யும் சகல
கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
தமது பாராட்டுக்களைத்
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி
அவர்கள்இ அரசியலமைப்பின்
பிரகாரம் தமக்கு
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைவாக புதிய பிரதமரையும் அமைச்சரவையையும்
நியமித்ததன் பின்னர் ஒரு சில தரப்பினரால்
பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி
நிலைமை தொடர்பில்
ஜனாதிபதி அவர்கள்
கவனம் செலுத்தியிருந்தார்.
அதற்கமைய
2018.11.15 மற்றும் 2018.11.18 ஆம் திகதிகளில்
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சித்
தலைவர்களின் பங்குபற்றலில் இரண்டு கூட்டங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டதுடன்இ நெருக்கடி நிலைமையை
ஏற்படுத்தாது நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற
சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு
ஜனாதிபதி அதன்போது
ஆலோசனை வழங்கியிருந்தார்.
நேற்றைய
தினம் இடம்பெற்ற
சர்வ கட்சி
சந்திப்பின்போது ஜனாதிபதி அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு
அமைவாக இன்று
(19) முற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற
கட்சி தலைவர்களின்
கூட்டத்தின்போது நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தில்
செயற்படுவதற்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
ஒன்றினை முன்வைப்பதாயின்
அதனை பாராளுமன்றத்தின்
சம்பிரதாயங்களுக்கு அமைவாக முறையாக
சமர்ப்பிக்கவும் பாராளுமன்றத்தில் நெருக்கடி
நிலைமை ஏற்படாதிருக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டமை
தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சகல
அரசியல் கட்சி
தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
நன்றி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment