ஜூலை 7 ஆம் திகதி கண்டியில் ஆயிரக்கணக்கான
பிக்குமாரை ஒன்று கூட்டவுள்ளேன்
- ஞானசார தேரர் அறிவிப்பு


ஜூலை 7 திகதி கண்டிக்கு 10000 தேரர்களை வரவழைக்க எதிர்ப்பர்த்துள்ளோம் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சமய நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

புனிதமான 4 மாதங்கள் கழிந்ததும் இறை நிராகரிப்பாளர்கள் , சிலை வணக்கத்தில் ஈடுபடுபவர்களை கண்ட இடத்தில் வெட்டிக்கொலை செய்யும் படி அல் குர்ஆனின் 9;5 அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லாவிட்டாலும் தீவிரவாதிகள் என கைது செய்யப்படும் அனைவரும் முஸ்லிம்கள்.

அடிப்படை வாதத்தை தோற்கடிக்க கூடிய பொறுப்பு பௌத்த தேரர்களுக்கே உள்ளது.

ஏன் என்றால் அவற்றுக்கு மத கோட்பாடுகளுக்கு அமையவே பதில் அளிக்க வேண்டுமே தவிர அரசியல் தீர்வுகளினால் அல்ல.

நாம் தற்போது ஊர் ஊராக சென்று குர்ஆனில் பன கூற தயாராவோம்.

நாம் குர் ஆன் ஹதீஸ் சுன்னா போன்றவற்றை படித்து தேர்ந்தால் பாரம்பரிய முஸ்லிம்களையும் பாதுகாத்துக்கொண்டு இந்த அடிபடை வாத நச்சு பாம்பை ஒழித்து கட்டி உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக எமக்கு ஆக முடியும்

ஜூலை 7 திகதி கண்டிக்கு 10000 தேரர்களை வரவழைக்க எதிர்ப்பர்த்துள்ளோம்.

பௌத்த தேரர்கள் ஒன்று பட்டால் எமது தலைவர்களை ஒன்றுபடுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top