ஊடகங்களே எங்களது
குடும்பத்தை கொன்று விட்டன
அகதி நிலையில் வாழ்ந்து வருகின்றோம்
ஷாபியின் மனைவி வைத்தியர் இமாரா தெரிவிப்பு



தமது கணவர் கைது செய்யப்பட்டமையை அடுத்து தமது குடும்பம் அகதி நிலையில் வாழ்ந்து வருவதாகவும் ஊடகங்களே எங்களது குடும்பத்தை கொன்று விட்டன என்றும் வைத்தியரின் மனைவியான வைத்தியர் - இமாரா ஷாபி தெரிவித்துள்ளார்.

சுமார் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் உண்மையில்லை. ஊடகங்களே எங்களது குடும்பத்தை கொன்று விட்டன என்றும் வைத்தியரின் மனைவியான வைத்தியர் - இமாரா ஷாபி தெரிவித்துள்ளார்.

தமது கணவர் கைது செய்யப்பட்டமையை அடுத்து தமது குடும்பம் அகதி நிலையில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கணவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும் பழைய இடத்தில் தொடர்ந்தும் பணியாற்ற முடியுமா? என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுதாரிகளால் முழு முஸ்லிம் சமூகமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் மனைவி வைத்தியர் - இமாரா ஷாபி தெரிவித்துள்ளார்

இதேவேளை வைத்தியர் ஷாபி தொடர்பில் தாம் பெற்று கொண்ட சாட்சியங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் எதிர்வரும் 27ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top