குருநாகல் வைத்தியர் தொடர்பில்
கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றை தடுக்கும்
குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை
சுகாதார அமைச்சின் விசாரணைக் குழுவின் அறிக்கை!



குருநாகல் வைத்தியர் செய்கு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றை தடுக்கும் எந்த சிகிச்சைகளையும் அவர் வழங்கியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஷாபியுடன் சிஸேரியன் சத்திரசிகிச்சையில் ஈடுபட்ட 69 தாதிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வைத்தியருக்கு சார்பாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

சிஸேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் வேளையில் வைத்தியர் ஷாபி பெண்களுக்கு கருத்தடை செய்வதையோ பலோபியன் குழாய்களுக்கு சேதம் ஏற்படுத்துவதையோ தாம் ஒருபோதும் கண்டதில்லை என வாக்குமூலமளித்த 69 தாதிகளும் தெரிவித்துள்ளனர்.
இவரின் சிகிச்சையையடுத்து மகப்பேறு பாதித்துள்ளதாக பல பெண்கள் முறைப்பாடு செய்திருந்தாலும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு முன்வர தயங்குவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதேசமயம் எதிர்வரும் 27 ஆம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் வைத்தியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top