ஜனாதிபதி வழங்கிய நியமனம் ஒன்றில்
சட்ட சிக்கல்
சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி நியமித்த விசாரணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலால்கொட எப்படி இடம்பெற்றார் என்பது குறித்து சட்டம் மற்றும் நீதித்துறையில் பேசப்பட்டு வருகிறது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 110ஆவது பந்திக்கு அமைய உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களை எழுத்து மூலமான சட்டத்தின் கீழ் உரிய பணிகளுக்கு மட்டுமே ஜனாதிபதி நியமிக்க முடியும்.

ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் விசேட ஆணைக்குழுவில் இப்படியான நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு முடியும் என்ற போதிலும், நீதியரசர்கள் அப்படியான நியமனங்களை ஏற்க கூடாது என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக சட்ட அறிஞரான கலாநிதி நிஹால் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதற்கு பிரதம நீதியரசர் அனுமதி வழங்கியிருந்தார். அவர் எந்த சட்டத்தின் கீழ் இந்த அனுமதியை வழங்கினார் என்பது பிரச்சினைக்குரியது எனவும் சட்டத்துறையை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top