இந்திய பிரதமர் மோடிக்கு
குடை பிடித்த ஜனாதிபதிகள்

  
சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் ஜனாதிபதி குடை பிடித்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, இலங்கை வந்த இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றார். அங்கு அவரை கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரோன்பே ஜீன்பெகோவ் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது திடீரென மழை தூறவே, பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்திருக்க வேண்டும். ஆனால், மரபை புறந்தள்ளி அந்நாட்டு ஜனாதிபதியே இந்திய பிரதமர் மோடிக்கு குடைபிடித்தார்.

இதேபோல் இலங்கைக்கு இந்திய பிரதமர் மோடி வந்தபோது மழை தூறியதால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குடை பிடித்தது குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top