இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு !
தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது

 கோவையில் நேற்று கைது செய்யப்பட்ட அசாருதீன் முகநூலூடாக இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) கைது செய்த கோவை முகமது அசாருதீன் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் தென்னிந்திய தளபதியாக செயல்பட்டவர் என்கின்றன விசாரணை வட்டாரங்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த அபுபக்கரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கோவை முகமது அசாருதீன்தான் இதில் முக்கிய பங்காற்றி வருவாதாக தெரிவித்தார்.

அதேபோல் இலங்கை சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம், தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய சஹ்ரானுடன் முகமது அசாருதீன் தொடர்பில் இருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து மே 30 ஆம் திகதி  அசாருதீன் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையின் முடிவில் அசாருதீன் கைது செய்யப்பட்டார். தென்னிந்திய தளபதி அசாருதீன், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தென்னிந்திய தளபதியாக செயல்பட்டவர். ஃபேஸ்புக்கில் KhilafahGFX என்ற பக்கத்தை உருவாக்கி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கருத்துகளை பதிவிட்டு ஆட்சேர்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்.  பயங்கரவாதி சஹ்ரானுடன் நேரடி தொடர்பிலும் இருந்தவர். இவருக்கும் இலங்கை தற்கொலைப் படை தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது உறுதியாகவில்லை.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top