கண்டி பொதுபல சேனா மாநாட்டில்
நிறைவேற்றப்பட்ட
ஒன்பது தீர்மானங்கள்!
கண்டி
போகம்பரை மைதானத்தில்
நேற்று நடைபெற்ற தேசிய மாநாட்டில்
9தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1. எமது சிங்கள இராஜ்ஜியத்தை மீளமைத்தல்
1815ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கத்துக்கும்
ஆங்கிலேயர்களுக்கும் இடையில் கண்டியில் கைச்சாத்திடப்பட்ட
ஒப்பந்தத்தின் பிரகாரம் எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட சகல மரபுரிமைகளை
வெற்றிக் கொள்வதற்காக
சிங்கள இராஜ்ஜியமொன்றை
மீளமைக்க
வேண்டும். சிங்கள மொழிபேசும் அனைத்து இனத்தவரையும்
இணைத்து ஒரு
இனமாக
பலப்படுத்துவது.
2. ஒரே நாடு, ஒரே இனம், ஒரே சட்டம்
மேலேத்தேயர்களின் சட்டத்
திட்டங்களுக்குப் பதிலாக எமது தனித்துவத்தை பாதுகாக்கக்
கூடிய
அரசியலமைப்பொன்றையும், நீதி கட்டமைப்பொன்றையும் புதிதாக
உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு மதத்திற்கும்
இனத்திற்கும் இருக்கும் தனித்தனியான சட்டங்கள்
உடன் நிறுத்தப்பட
வேண்டும்.
3. புத்தசாசனத்தை பாதுகாத்தல்
புத்தசாசனத்தை பாதுகாப்பதற்கான
அரசாங்கத்தின் தலையீட்டை பலப்படுத்த வேண்டும்.
அடிப்படைவாத மதக் குழுக்களின்
செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக
இருக்க வேண்டும்.
4. தேசிய பாதுகாப்பு
தனியான
சட்டங்கள் வங்கிமுறைகள், நீதிமன்றம்
ஊடாக தனியான
கலாசார இராஜ்ஜியங்களை உருவாக்க
முயற்சிப்பது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். இதனை உடனடியாக நிறுத்த
வேண்டும்.
5. தேசிய மரபுரிமைகளை பாதுகாத்தல்
எமது
வரலாற்றையும், தொல்பொருள் ஆதாரங்களையும் அழிப்பதை கட்டுப்படுத்துவதற்கு
புதிய சட்டங்கள்
கொண்டுவரப்பட வேண்டும்.
6. பலமான நிரந்தர பொருளாதாரம்
தற்போதைய பொருளாதார
கட்டமைப்பு மற்றும் பொருளாதார செயற்பாட்டால் சிங்களவர்களுக்கு வரையறுக்கப்பட்ட
இடமே இருக்கிறது.
இந்நிலைமை மாற்றி
பொருளாதாரத்தினுல் இருக்கும்
இனவாத, மதவாத
முறைகளை தடைசெய்ய
வேண்டும்.
7. தேசப்பற்றுள்ள கல்விமுறை
எமது கல்விமுறையானது
எதிர்கால சந்ததியை
பலவீனப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. மத,இன அடிப்படையிலான
பாடசாலைகள், கல்வி நிறுவனங்களை தடைசெய்ய
வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்
அடங்கலான கல்வி
நிறுவனங்களில் மத அடிப்படைவாதத்தை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்க
வேண்டும்.
8. வீடமைப்பு,
உட்கட்டமைப்பு வசதிகள்
பெரும்பான்மையான சிங்கள
தாய்மாரை இலக்கு
வைத்து முன்னெடுக்கப்படும்
கருத்தடை செயற்பாடுகள் நிறுத்தப்பட
வேண்டும். சகல
இனங்களுக்கும் பொதுவான குடும்பக் கட்டுப்பாட்டு
முறையை முன்னெடுக்க
சட்டம் கொண்டுவர
வேண்டும்.
9. சுகாதாரம் மற்றும் போஷாக்கு
சகல பிரஜைகளுக்கும்
போதுமான வசதிகளை
பெற்றுக்கொடுப்பதை அடிப்படை
உரிமையாக கருத
வேண்டும்.
ஹலால்
போன்ற மதரீதியான
உணவு சான்றிதழ்
முறைகளை சிங்கள
மக்கள்
மீது பலாத்காரமாக திணிப்பதை தடுத்து அவ்வகையான
சான்றிதழ்கள் தேவையானவர்களுக்கு
மாத்திரம் மட்டுப்படுத்தப்பட
வேண்டும்.
மேற்படி
ஒன்பது தீர்மானங்களே
இந்த மாநாட்டில்
நிறைவேற்றப்பட்டன.

0 comments:
Post a Comment