அரசாங்கமே உடனே வெளியேறு
மக்கள் விடுதலை முன்னணியின்
எதிர்ப்பு பாதயாத்திரை
களுத்துறையிலிருந்து ஆரம்பம்!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பாதயாத்திரை களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கமே உடனே வெளியேறுஎனும் தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக பாதயாத்திரை ஒன்றை மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்துள்ளது.

நாட்டிலுள்ள தொழிற்சாலைகள், வங்கிகளை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருவதற்கு எதிராகவே இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி களுத்துறையிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகியுள்ள பாதயாத்திரை, இன்று மாலை மொரட்டுவையை சென்றடையவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, குறித்த பாதயாத்திரை நாளை பிற்பகல் 3 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர், அங்கு பொதுக் கூட்டம் ஒன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top