இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின்
விலை அதிகரிப்பு
இன்று
நள்ளிரவு முதல்
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு
தெரிவித்துள்ளது.
92 ஒக்டைன்
பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 4 ரூபாவாலும்
அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,
சூப்பர் டீசல்
ஒரு லீட்டரின்
விலை 3 ரூபாவினாலும்
அதிகரிக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு
தெரிவித்துள்ளது.
எரிபொருள்
விலைச் சூத்திரத்திற்கமைவாக
இந்த விலை
அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது .
இருப்பினும்,
ஒட்டோ டீசல்
விலையில் எதுவித
மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment