மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையம்
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவு
2020 ஆம் ஆண்டுக்கான பயிற்சி மாணவிகளை
புதிதாக இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித்
திணைக்களத்தினால் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நடாத்தப்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் ஒரு
வருட கால மாதர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சி நெறியினை பயிலுவதற்காக தகைமை
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
01. பயிற்சி காலம்
2020.01.01ம் திகதியன்று ஆரம்பித்து ஒரு வருட கால பகுதி கொண்ட பயிற்சி நெறியாகும்.
02. தகைமைகள்
1.
விண்ணப்பதாரி 2020.01.31ம் திகதியன்று 17 வயதுக்கு குறையாதவராகவும் 35
வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
அத்துடன்
2.
விண்ணப்பதாரி குறைந்தது ஆண்டு 10 கல்வியைப் பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.
( பாடசாலை விலகல் சான்றிதழ் / பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்ட
கடிதம் மூலம் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்)
3.
விண்ணப்பதாரி குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக
வசித்து வருபவராகவும் இருத்தல் வேண்டும்.
03. தெரிவு செய்யும் முறை
தகைமையுள்ள
விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சை ஒன்றுக்கு
அழைக்கப்பட்டு தகைமைகள், குடும்ப வருமானம், சுய தொழில் ஈடுபாடு ஆர்வம்
என்பனவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.
04. விண்ணப்பிக்க வேண்டிய முறை
இணைக்கப்பட்டுள்ள மாதிரி
படிவத்தில் விண்ணப்பம் தயாரிக்கப்பட்டு 2020.11.15ம் திகதியன்று அல்லது அதற்கு
முன்னர் கிடைக்கக்கூடியவாறு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பின்வரும்
முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
சாய்ந்தமருது.
தபால் உறையின் இடது பக்க
மேல் மூலையில் “ மாதர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சி நெறி - 2020” என குறிப்பிடுதல்
வேண்டும்.
மேலதிக
விபரங்களுக்கு திருமதி எம்.ஏ.எம். முனவ்வறா, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரைத்
தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி
இலக்கம் – 0777960903
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
சாய்ந்தமருது.

0 comments:
Post a Comment