Sunday, June 29, 2014

அம்பேபுஸ்ஸ சுமங்கல தேரருக்காக அழுது புரண்ட அப்துல் பாஸில்


அம்பேபுஸ்ஸ சுமங்கல தேரருக்காக
அழுது புரண்ட அப்துல் பாஸில்

விகாராதிபதி ஒருவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட முஸ்லிம் ஒருவர் அழுது புரண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குருணாகல் ரம்படகல்ல என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசுவர்ணகிரிரஜமக விகாரையின் விஹாகாராதிபதியாகவிருந்த அம்பேபுஸ்ஸ சுமங்கல தேரர் அவர்கள் அண்மையில் காலாமானார். அன்னாரது இறுதிக் கிரியையகள் நேற்று முன்தினம் இடம்பெற்றன.
அன்னாரது தகனக் கிரியைகள் ரம்படகல்ல மத்திய மகாவித்தியாலயத்தின் வினையாட்டரங்கில் இடம்பெற்றன. பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட இந்தப் பிரதேசத்தை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் அன்னாரது தகனக் கிரியைகளில் கலந்து கொண்டு தங்களது அனுதாபத்தையும் தெரிவித்தனர்.
அதன்போது அங்கிருந்த அப்துல் பாஸில் என்பவர் உட்படலான பல முஸ்லிம்கள் தேரரின் பிரிவுத் துயரைத் தாங்க முடியாது அழுத காட்சியானது அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில்நெத் எப். எம்என்ற இணையம் இன ஐக்கியத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்தச் சிங்கள இணையம் இந்த நிகழ்வை ஒரு நெகிழ்ச்சி மிக்க சம்பவமாகக் காட்டியுள்ளது.
நன்றி நெத்: எப்.எம்.

தமிழில் .எச்.சித்தீக் காரியப்பர்



No comments:

Post a Comment