Monday, June 23, 2014

முஸ்லிம்களின் அவதானத்துக்கு... - புன்னியாமீன்

முஸ்லிம்களின் அவதானத்துக்கு...
- புன்னியாமீன்


அன்பு முஸ்லிம் நண்பர்களே !
உங்கள் அவதானத்துக்கு...
பேரினவாதிகளின் அட்டூழியங்கள் முடிவடைந்து விட்டன  என முடிவெடுத்து விடாதீர்கள் தொடர்ந்தும் உங்கள் அவதானமும் விழிப்புணர்வும் மிகமிகஅவசியம்.
குறிப்பாக பேரினவாதிகள் செரிவாக வாழும் பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் கிராமங்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது. திட்டமிட்ட முறையில் முஸ்லிம் பள்ளிவாயில்கள் வியாபாரத் தளங்கள் ஆகியவற்றுக்கு கற்களை எரிந்து முஸ்லிம்களை கோபமூட்டி பிரச்சினைகளைகளை உருவாக்க முயலாம்.அத்துடன் முஸ்லிம்கள் செரிவாக வாழும் பகுதிகளில் முஸ்லிம்கள் எழுதுவதைப் போல பேரினவாதிகளை தூண்டக் கூடிய வகையில் சுவரொட்டிகளை இரவோடு இரவாக ஒட்டக்கூடும். நேற்றிரவும் இதுபோன்ற சம்பவமொன்று கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ளது.
எனவே அதிகாலையிலேயே இதுபோன்ற விடயங்கள் நிகழ்ந்துள்ளனவா என அவதானிக்கவேண்டியது உங்கள் கடமையாகும். அப்படிப்பட்ட சுவரொட்டிகள் இருப்பின் அவற்றை கலட்டி விடுவது நல்லது.அத்துடன் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டம் இருப்பின் அந் நடமாட்டங்கள் பற்றியும் அவதானித்துக்கொள்ளுங்கள்.கலவரங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை நீங்கள் கண்டாலோ அல்லது உணர்ந்தாலோ உடனடியாக 119 எனும் இலக்கத்துக்கு அழைத்து பொலிஸுக்கு தகவலைக்கொடுங்கள். அத்துடன் உங்கள் பகுதிப் பெரியவர்களுடன் கலந்துரையாடுங்கள்
மிகவும் நன்றி நண்பர்களே !
என்றும் அன்புடன்.
புன்னியாமீன்

23.06.2014

No comments:

Post a Comment