Monday, June 23, 2014

அல்லாஹ் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமேபயன்படுத்தமுடியும்: மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு



அல்லாஹ் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமேபயன்படுத்தமுடியும்: மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு

மலேசியாவில், "அல்லாஹ்' என்ற வார்த்தையை கிறிஸ்தவ பத்திரிகைகள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மீண்டும் அந்தத் தடையை உறுதி செய்துள்ளது.
அங்கிருந்த கத்தோலிக்க தேவாலயம் ஒன்று செய்திகள் வெளியிடும் தனது "ஹெரால்ட்' பத்திரிகையில் "அல்லாஹ்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு 2007ஆம் ஆண்டு தடை உத்தரவு பிறப்பித்தது.
அந்த தடை உத்தரவை மாற்றக்கோரி சம்பத்தப்பட்ட கத்தோலிக்க தேவாலயத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த மலேசிய நீதிமன்றம்மதம் குறித்த விசயங்களில் அல்லாஹ் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.  இதனால்முஸ்லிம்கள் அதிகம் வாழும் அந்நாட்டில் மதம் தொடர்பாக எழுந்துள்ள பதற்றம் தணிந்துள்ளது.



No comments:

Post a Comment