Sunday, June 22, 2014

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைப்பதை நான் கண்டேன் அடுத்த பாராளுமன்ற அமர்வில் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிவிப்பு –ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி பாலித தெவரப்பெரும

முஸ்லிம்களின்  வர்த்தக நிலையங்களுக்கு
    தீ வைப்பதை நான் கண்டேன்   
      அடுத்த பாராளுமன்ற அமர்வில் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிவிப்பு

–ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி  பாலித தெவரப்பெரும

அடுத்த பாராளுமன்ற அமர்வில் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று 22 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியராளர் சந்திப்பின் போதே பாலித தெவரப்பெரும எம்.பி  இவ்வாறு கூறியுள்ளார்
பாலித தெவரப்பெரும எம்.பி. மேலும்  தெரிவித்ததாவது:-

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 உறுப்பினர்களில் நானும் ஒருவன். பொலிஸார் முன்னிலையில் வெலிபென்ன பிரதேசத்தில் முஸ்லிம்  இனத்தவரின் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ வைப்பதனை நான் கண்டேன். அவ்வாறு செய்ய இடமளிக்க வேண்டாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள் என கூறினேன். ஆனால் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பொலிஸ் மாஅதிபர் நிச்சயமாக பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் சிங்கள இனத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்க முடியாது. அடுத்த பாராளுமன்றத்தில் நான் இராஜினாமா செய்வேன். இதனை எம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. அராங்கம் இதில் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment