Sunday, June 22, 2014

மையத்து வீடு ஒன்றுக்கு வந்து ஆறுதல் சொன்னவர்களே முஸ்லிம் தூதுவர்கள்! அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்தவர்கள் மீது ஹரீஸ் காட்டம்

மையத்து வீடு ஒன்றுக்கு வந்து ஆறுதல் சொன்னவர்களே முஸ்லிம் தூதுவர்கள்!
அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்தவர்கள் மீது ஹரீஸ் காட்டம்
 –.எச்.சித்தீக் காரியப்பர்
பேருவளை, அளுத்கம பிரசேங்களில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளின் சில தூதுவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமைச் சந்தித்து கலந்துரையாடியதானது மையத்து வீட்டுக்கு ஆறுதல் சொல்வதற்குச் சென்ற ஒரு நிகழ்வாக மட்டுமே கருத வேண்டும். இது தவிர அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதனையும் செய்யமாட்டார்கள் என அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எம்.பி என்னிடம் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்கள் நலன் தொடர்பில் கவனிப்பதற்கு முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சில் எந்தவொரு தனிப் பிரிவும் இல்லை. எனவே, இந்த நிலையில் அவர்கள் எமது முஸ்லிம்களுக்கு ஏற்படும் நிலைமைகள் தொடர்பில் அனுதாபத்தை மட்டுமே தெரிவிக்க முடியும். ஆனால் எதனையும் செய்ய முடியாது.
இலங்கைத் தமிழர் நலன் தொடர்பில் இந்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தனிப் பிரிவு செயற்படுகிறது.
அதேபோன்று, இலங்கை தமிழர் மற்றும் முஸ்லிம்களின் நலன் தொடர்பில் கரிசனை செலுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திலும் தனித் தனி பிரிவுகள் உள்ளன.

ஆனால், இலங்கை முஸ்லிம்கள் நலன் தொடர்பில் அக்கறை செலுத்த முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சில் எந்தவொரு தனிப்பிரிவும் இல்லை. எனவே, இந்த நிலையில் அவர்கள் எமது முஸ்லிம்களுக்கு ஏற்படும் நிலைமைகள் தொடர்பில் அனுதாபத்தை மட்டுமே தெரிவிக்க முடியும் என்றும் என்னிடம் கூறினார்.

No comments:

Post a Comment