Sunday, June 22, 2014

எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்க... கூகுளுக்கு கடிதம் எழுதிய மழலை!

எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்க...
கூகுளுக்கு கடிதம் எழுதிய மழலை!


கூகுள் நிறுவன ஊழியரான தனது தந்தைக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த சிறுமியின் பாசத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு ஒரு வார கால விடுமுறை அளித்து கூகுள் உத்தரவிட்டுள்ளது.
 பிரபல சர்ச் எஞ்சினான கூகுளின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் சமீபத்தில் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை கையெழுத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
'எனது தந்தைக்கு வருகிற புதன் கிழமை பிறந்த நாள். அவருடன் இணைந்து அவரது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் அவருக்கு வார விடுமுறை சனிக்கிழமை தான் வருகிறது. எனவே அவரது பிறந்த நாளின் போது அவர் என்னுடன் இருப்பதற்கு அவருக்கு நீங்கள் புதன் கிழமை விடுமுறை தரவேண்டும்' என எழுதியிருந்தார்.

சிறுமியிடமிருந்து வந்த கடிதத்தைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்த டேனியல் உடனடியாக சிறுமிக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர், 'எங்கள் நிறுனத்தின் திறமையான ஊழியர்களுள் உன் தந்தையும் ஒருவர். அதனால் அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அந்த வாரம் முழுவதுமே விடுமுறை அளிக்கிறேன்' என தெரிவித்துள்ளார். தன் தந்தை மீது பாசம் வைத்துள்ள சிறுமியின் அன்பிற்கு மரியாதை அளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அந்த ஊழியருக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment