Sunday, June 22, 2014

இளவரசர் வில்லியம் பிறந்த நாள் இங்கிலாந்து ராணி ஹெலிகாப்டர் பரிசு

இளவரசர் வில்லியம் பிறந்த நாள்
இங்கிலாந்து ராணி ஹெலிகாப்டர் பரிசு

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் பிறந்த நாளுக்கு, அவரது பாட்டியான இங்கிலாந்து ராணி எலிசபெத் சர்ப்ரைஸாக ஒரு ஹெலிகாப்டரை வாங்கி பரிசளிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதிக்கு பிறந்த மூத்த மகன்தான் வில்லியம். இவர், இங்கிலாந்து விமானப் படையில் ஹெலிகாப்டர் விமானியாகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு கேத்தே மிடில்டன் என்ற மனைவியும், குட்டி இளவரசர் ஜார்ஜ் என்ற 6 மாத குழந்தையும் உள்ளனர். இளவரசர் வில்லியம் நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.

வில்லியமின் பிறந்த நாளுக்கு அவரது பாட்டியும் இங்கிலாந்து ராணியுமான எலிசபெத் சர்ப்ரைஸாக ஒரு பரிசு வழங்க விரும்பினார். இதைத் தொடர்ந்து, அகஸ்டா நிறுவனத்திடம் நவீன சொகுசுகள் நிறைந்த 109எஸ் என்ற ஹெலிகாப்டரை நீண்ட நாள் குத்தகைக்கு இங்கிலாந்து ராணி வாங்கியுள்ளார். மணிக்கு 180 கி.மீ. வேகத்தில், 9 பேர் செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த சொகுசு ஹெலிகாப்டர், இளவரசர் வில்லியம் குடும்பத்தினருடன் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு பயன்படுத்தப்படும். இந்த ஹெலிகாப்டர் பரிசை நாளை, பிறந்த நாள் விழாவின்போது இங்கிலாந்து ராணி சர்ப்ரைஸாக வில்லியமுக்கு வழங்குவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment