Sunday, June 22, 2014

சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்பட வேண்டும்; கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்!

சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்பட வேண்டும்;
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்!

கடந்த 15 ஆம் திகதி அளுத்கம, தர்க்காநகர், பேருவலை போன்ற முஸ்லிம் பகுதிகளில் நடத்தப்பட்ட கொடூர செயல்களையும் அநீதிகளையும் எதிர்த்து அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் ஒரு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை மிகவும் அமைதியான முறையில் நடாத்தியது
இந்த  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் சிரேஷட பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்..கபூர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்;
இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சில பேரினவாத தீவிர சக்திகள் இனவாதத்தைக் கக்கி அப்பாவி மக்களை குழப்பங்களுக்குள்ளாக்கி அவர்களின் வீடுகளையும்; வியாபார நிலையங்களையும் உடமைகளையும்; உயிர்களையும் சூரையாடி தீயிட்டுக் கொழுத்தியுள்ளன.
அந்த தீய சக்திகளை சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்தி அநீதி இழைக்கப்பட்ட அம்மக்களுக்கு நீதியும் நியாயமும் நிவாரணமும் உடன் வழங்கப்பட வேண்டும்.

இந்த கோசத்தை முன்நிறுத்தியே இந்த கண்டனப் பேரனியை எமது சங்கம் நடத்துகின்றது.” என்று சட்டத்தரணி கபூர்  குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment