Tuesday, June 3, 2014

நரேந்திர மோடி - ஜெயலலிதா சந்திப்பு கச்சத் தீவை மீட்க இந்தியப் பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்


நரேந்திர மோடி - ஜெயலலிதா சந்திப்பு

கச்சத் தீவை மீட்க இந்தியப்  பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்களை காப்பாற்ற கச்சத்தீவை மீட்பதே வழி என்றும் ஜெயலலிதா தெரிவித்ததுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்ற பின் முதல் முறையாக  ஜெயலலிதா சந்தித்து பேசினார். டில்லியில் பிரதமர் அலுவலகத்தில் ஜெயலலிதா 50 நிமிடம் மோடியை சந்தித்து பேசினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த மனு ஒன்றை பிரதமரிடம் ஜெயலலிதா அளித்தார். அந்த மனுவில் தமிழகத்தின் கோரிக்கைகளை விளக்கியுள்ளதாக மோடியை சந்தித்த பின் ஜெயலலிதா செய்தியாளருக்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்துள்ளார். மோடியை சந்தித்ததன் மூலம் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் என்றும்  ஜெயலலிதா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


No comments:

Post a Comment