Tuesday, June 3, 2014

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக ஹசிம் அம்லா!


தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின்

டெஸ்ட் கேப்டனாக ஹசிம் அம்லா!

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அம்லா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது ஆஸ்திரேலியா அணியிடம் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா இழந்தது. அத்துடன் கேப்டனாக இருந்த ஸ்மித் சரியாக விளையாடாததால் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான டெஸ்ட் அணி வீரர்களை இன்று அறிவித்தது. இதில் ஹசிம் அம்லாவை கேப்டனாக நியமித்துள்ளது. டி வில்லியர்ஸ் துணை கேப்டனாக செயல்படுவார் எனக் கூறியுள்ளது.
டெஸ்ட் அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

பீட்டர்சன், டியான் எல்கார், ஹசிம் அம்லா (கேப்டன்), டு பிளேசிஸ், டி வில்லியர்ஸ், டுமினி, ஸ்டீயான் வான் ஜைல், மேர்னே மோர்கல், பிலாண்டர், இம்ரான் தாஹிர், கைல் அப்போட், டி காக், ஸ்டெய்ன், டேன் பியட்

No comments:

Post a Comment