Wednesday, July 2, 2014

ஈராக் எல்லையில் உள்ள சிரியா நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு கைப்பற்றியதாகத் தெரிவிப்பு.


ஈராக் எல்லையில் உள்ள சிரியா நகரத்தை
ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு கைப்பற்றியது

ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் நகரம் ஒன்றை .எஸ்..எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக .எஸ்..எஸ். என்ற அமைப்பின் போராளிகள் சண்டையிட்டு வருகிறார்கள். அந்நாட்டின் மொசூல், திக்ரித், கர்பாலா உள்பட பல்வேறு நகரங்களை கைப்பற்றிய அவர்கள் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வந்தனர். போராளிகள் பாக்தாத்தை நெருங்குவதற்குள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும்படியும் போராளிகளின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்கும்படியும் பிரதமர் நூர் அல்-மாலிகி இராணுவத்துக்கு உத்தரவிட்டார். அங்கு பலத்த சண்டை நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் .எஸ்..எஸ். சன்னி போராளிகள் தாங்கள் ஏற்கனவே சிரியா நாட்டில் கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம் கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இஸ்லாமிய நாடு என்ற ஒரு நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகளுக்கு போராளிகள் இஸ்லாமிய நாடு என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த நாட்டுக்கு தலைவராக அபு பக்கீர் அல்-பகாதி என்பவரையும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஈராக் எல்லை பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் நகரம் ஒன்றை .எஸ்..எஸ். என்ற அமைப்பின் போராளிகள் கைப்பற்றியதாக . நா. அறிவித்துள்ளது. பவுகமால் என்ற சிரியாவின் எல்லை நகரம் கைப்பற்றப்பட்டதாக அங்கிருக்கும் .நா.வின் கண்காணிப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈராக், சிரியா நாடுகளில் இருக்கும் சன்னி பிரிவுகளை இணைத்த தனி நாடு ஒன்றை உருவாக்க வளம் நிறைந்த நகரங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment