Wednesday, July 2, 2014

உலக முஸ்லிம்கள் புதிய இஸ்லாமிய நாட்டில் குடியேறவேண்டும்: ஐஸிஸ் கோரிக்கை


உலக முஸ்லிம்கள் புதிய இஸ்லாமிய நாட்டில் குடியேறவேண்டும்

ஐஸிஸ் கோரிக்கை


சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றியப் பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாக போராளிகள் திங்கள்கிழமை அறிவித்தனர். இந்நிலையில் உலக முஸ்லிம்கள் புதிதாக உருவாகியுள்ள இஸ்லாமிய அரசை பலப்படுத்த ஐஸிஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிதாக உருவாகியுள்ள இந்த இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது முஸ்லிம்களுக்குரிய கடமை என்று அவர் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்தி ஒன்றில் கூறியிருக்கிறார்.குறிப்பாக, நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், இராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வரவேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார்.

No comments:

Post a Comment