Tuesday, July 1, 2014

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ



இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு
தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை

-    பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ

இலங்கையை மையமாக வைத்து இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின்  செயலாளர்  கோத்தபாய  ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் என்ற நாளிதழுக்கு கோத்தபாய ராஜபக்ஸ செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் தங்கியிருக்க வாய்ப்புள்ளது என்று இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் என்னிடம் கூறினர். இதன் அடிப்படையில் நாங்கள் விசாரித்தபோது, அது உண்மையல்ல என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் கூறியது போன்று எதுவும் நடக்க வாய்ப்பில்லை. இதுபற்றி அவர்கள் கவலைப்படத்தேவையும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment