Tuesday, July 1, 2014

மறந்து விட்டீர்களா..? நினைவில் உள்ளதா..? (துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)



மறந்து விட்டீர்களா..?
 நினைவில் உள்ளதா..?

(துறையூர் ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்)

கடந்த வருடம் பெருநாளைத் தீர்மானிப்பதற்கான பிறை காணுதல் தொடர்பில் எம் சமூகம் ஒருவருடன் ஒருவர் முரண்பட்டுக் கொண்ட சமயம் கிரேன்ட் பாஸ் பள்ளிவாயலை பேரின வாதிகள் தாக்கி அதனை அப்படியே "இது முஸ்லிம் குழுக்களுக்கிடையிலான"இயக்கச் சண்டையின் விளைவு என பிளேட்டை முஸ்லிம்கள் மீது மாறிப் போட்டார்கள்.அவர்கள் எம் மீது பழி சுமற்ற நாமே அவர்களுக்கு வழி சமைத்துக் கொடுத்தோமல்லவா..?
இன்னும் நாம் திருந்தாது நேற்று சாய்ந்தமருது sltj கிளையை உடைத்து மென் மேலும் குட்டையைக் குழப்பி பேரின வாதிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.இதனை வைத்தே எத்தனை பள்ளிகள் உடைக்கப்படப் போகிறதோ..?
இந்தப் பள்ளியை யார் உடைத்தார்கள் என்ற வினாவிற்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே முஸ்லிம்கள் தான் உடைத்தார்கள் என சான்று பகரும்.
பேரின வாதிகள் பள்ளியை உடைத்து விட்டு "அதை உடைத்தவர்கள் எங்களை காரணியாய் கொண்டு ஏன் இதை உடைக்க மாட்டார்கள்..?"என வினா எழுப்பினால் உங்களால் யாது பதிலளிக்க இயலும்..?வெளிச் சமூகம் தான் எம்மை நம்புமா..?
ஏற்கனவே,உலகமே முஸ்லிம் உம்மாவிற்கு பயங்கரவாதி என்ற பட்டத்தை வழங்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது.
நாமும் இவ்வாறு நடப்போமேயானால் அவர்கள் கூறுவதற்கு நாமே சான்று பகர்வது போன்றாகாதா..?
இப்படியான எம் அஹ்லாக்கைப் பார்த்தால் யாராவது இஸ்லாத்திற்கு வருவார்களா..?
          முஸ்லிம் சமூகமே..!       சிந்தித்து செயல்படு!!  

No comments:

Post a Comment