Tuesday, July 1, 2014

இந்திய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா எச்சரிக்கை நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டால் தலைமை நீதிபதி பதவி ராஜினாமா



இந்திய மத்திய அரசுக்கு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா எச்சரிக்கை

நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டால் தலைமை நீதிபதி பதவி ராஜினாமா

நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டால் பதவி விலக போவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா எச்சரிக்கை விடுத்திருப்பது இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா  முன்னாள் சொலிசிட்டர் கோபால் சுப்ரமணியத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய மத்திய அரசு செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்தார். தமக்கு தெரியாமலேயே அதிகாரிகள் கோபால் சுப்ரமணியத்தின் பெயரை நீக்கி விட்டதாக கூறிய அவர் நீதித்துறையின் முக்கிய பதவிக்கான நியமனத்தில் மத்திய அரசு சாதாரணமாக நடந்து கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டால் ஒரு வினாடி கூட தலைமை நீதிபதியாக நீடிக்க போவதில்லை என்றும் ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.

நீதிபதி நியமன விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் செயல்பாட்டை உச்ச நீதிமன்ற நீதிபதியே விமர்சனம் செய்திருப்பது  அந்நாட்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment