Tuesday, September 2, 2014

'அமெரிக்காவுக்கு 2-வது தகவல்' மேலும் ஓர் அமெரிக்க பத்திரிகையாளரின் தலை துண்டிப்பு!


'அமெரிக்காவுக்கு 2-வது தகவல்'
மேலும் ஓர் அமெரிக்க பத்திரிகையாளரின் தலை துண்டிப்பு

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள் அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த இன்னொரு பத்திரிகையாளர் ஸ்டீவன் சாட்லாஃப் என்பவரின் தலையை துண்டித்துள்ளது .எஸ்..எஸ். புரட்ச்சிப் படை. அந்த வீடியோ பதிவுகளை .எஸ். வெளியிட்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.எஸ்..எஸ். புரட்ச்சிப்படை அனுப்பியுள்ள அந்த வீடியோவுக்கு (அமெரிக்காவுக்கு இரண்டாவது தகவல்) “A second message to America” என பெயரிடப்பட்டுள்ளது. ஈராக் பிரச்சினையில் அமெரிக்க தலையீட்டை கண்டிக்கும் வகையில் ஸ்டீவன் சாட்லாஃப் தலை துண்டிக்கப்படுவதாக கூறுப்பட்டுள்ளது. 'இவரது தலை, ஈராக் பிரச்சினையில் அமெரிக்க தலையீட்டிற்கான விலை' என்கிறது புரட்சியாளரின் அந்தப் பேச்சு.







No comments:

Post a Comment